2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்லில் அறிமுகமான யாழ்ப்பாணத்தின் வியாஸ்காந்த்

Shanmugan Murugavel   / 2024 மே 08 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார்.

ஹைதரபாத்தில் தற்போது நடைபெற்று வரும் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுக்கெதிரான போட்டியிலேயே சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காகவே 22 வயதான வியாஸ்காந்த் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான வியாஸ்காந்த், 19 வயதுக்குட்பட்ட இலங்கையணியில் இடம்பெற்றதைத் தொடர்ந்து கவனம் பெற்று பின்னர் லங்கா பிறீமியர் லீக்கில் விளையாடியிருந்தார்.

பின்னர் பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் விளையாடியதுடன் ஆசியப் போட்டிகளில் இலங்கைக்கான அறிமுகத்தை மேற்கொண்டதுடன், தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக இருபதுக்கு – 20 தொடரான ஐ.எல்.டி.20-இலும் விளையாடியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .