2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஐ.பி.எல்லில் ஹஸரங்க, சமீர

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டுப் போட்டிகளின் இரண்டாவது பகுதிக்காக, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடன் இலங்கையின் சகலதுறைவீரர் வனிடு ஹஸரங்க, வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, சிங்கப்பூரின் சகலதுறைவீரர் டிம் டேவிட் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரின் நியூசிலாந்து துடுப்பாட்டவீரர் பின் அலென், வேகப்பந்துவீச்சாளர் ஸ்கொட் குக்லஜின் மற்றும் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் கேன் றிச்சர்ட்ஸன், சகலதுறைவீரர் டேனியல் சாம்ஸ், சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பா ஆகியோர் ஐ.பி.எல்லின் இரண்டாவது பகுதியிலிருந்து விலகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X