Shanmugan Murugavel / 2025 மார்ச் 21 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) கடந்த பருவகாலத்தில் இமாலய ஓட்ட எண்ணிக்கைகளைக் குவித்து எதிரணிகளுக்கு அச்சமூட்டிய சண்றைசர்ஸ் ஹைதரபாத், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸிடம் விட்டதை இம்முறை பிடிக்கும் நோக்கில் இம்முறை களமிறங்குகின்றது.
கடந்த முறை போர்மியுலாவையே இம்முறையும் சண்றைசர்ஸ் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஏற்கெனவே இருந்த அபிஷேக் ஷர்மா, ட்ரெவிஸ் ஹெட், ஹெய்ன்றிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டியுடன் இஷன் கிஷனையும் இம்முறை கூட்டணி சேர்த்துள்ளது. இதற்குப் பின்னால் அபினவ் மனோகர், சச்சின் பேபி, அனிகெட் வெர்மாவே இருக்கின்றமையே குறையாக இருக்கின்றது. ஏனெனில் ராகுல் ட்ரிபாதி, மாயங்க் அகர்வால், அன்மொல்பிறீட் சிங், அப்துல் சமட், ஏய்டன் மார்க்ரம், கிளென் பிலிப்ஸை கடந்த முறை குழாமிலிருந்து விடுவித்திருந்தது.
பந்துவீச்சுப் பக்கம் புவ்னேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன், உம்ரான் மலிக், மாயங்க் மார்க்கண்டே, பஸல்ஹக் பரூக்கி, ஷபாஸ் அஹ்மட், வொஷிங்டன் சுந்தர், மார்கோ ஜன்சன் ஆகியோரை விடுவித்தபோதும் மொஹமட் ஷமி, ஹர்ஷால் பட்டேல், ராகுல் சஹர், அடம் ஸாம்பா, சிமர்ஜீட் சிங் என தகுந்த பிரதியீடுகள் பிரதியிட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: அபிஷேக் ஷர்மா, ட்ரெவிஸ் ஹெட், இஷன் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹெய்ன்றிச் கிளாசென், அபினவ் மனோகர், கமிந்து மென்டிஸ், பற் கமின்ஸ், ஹர்ஷால் பட்டேல், மொஹமட் ஷமி, ராகுல் சஹர்
தாக்கம் செலுத்தும் வீரர்கள்: அடம் ஸாம்பா, சச்சின் பேபி, வியான் முல்டர், சிமர்ஜீட் சிங்.
18 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
43 minute ago