2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கெதிராக 171 ஓட்டங்களைப் பெற்ற லக்னோ

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸுக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் 171 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப்பின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ, நிக்கலஸ் பூரானின் 44 (30), ஆயுஷ் படோனியின் 41 (33), ஏய்டன் மார்க்ரமின் 28 (18), அப்துல் சமட்டின் 27 (12) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில் அர்ஷ்டீப் சிங் 4-0-43-3, மார்கோ ஜன்சன் 4-0-28-1, கிளென் மக்ஸ்வெல் 3-0-22-1, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2-0-15-0, லொக்கி பெர்கியூசன் 3-0-26-1, யுஸ்வேந்திர சஹால் 4-0-36-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X