2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஐ.பி.எல்: லக்னோவைத் தோற்கடித்த கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2024 மே 06 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்றிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற லக்னோவின் அணித்தலைவர் லோகேஷ் ராகுல், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, சுனில் நரைனின் 81 (39), பில் ஸோல்டின் 32 (14), அங்க்ரிஷ் ரகுவன்ஷியின் 32 (26), ரமன்டீப் சிங்கின் ஆட்டமிழக்காத 25 (06), அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் 23 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 236 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்னோ, மிற்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா (3), வருண் சக்கரவர்த்தி (3), அன்ட்ரே ரஸல் (2), சுனில் நரைனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே பெற்று 98 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக நரைன் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .