Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனித்த ஒலிம்பிக் போட்டி ஒன்றில் ஏழு பதக்கங்களை வென்ற முதலாவது நீச்சல் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் இம்மா மக்கியோன் நேற்று மாற்றியிருந்தார்.
50 மீற்றர் பிறீஸ்டைலிலும், 4 * 100 மீற்றர் மெட்லி அஞ்சலோட்டத்திலும் தங்கப் பதக்கங்களையும் வென்றமையையடுத்தே மேற்குறிப்பிட்ட சாதனையை மக்கியோன் படைத்திருந்தார்.
இப்போட்டிகள் தவிர, 100 மீற்றர் பிறீ ஸ்டைல், 4*100 மீற்றர் பிறீ ஸ்டைல் அஞ்சலில் தங்கப் பதக்கங்களையும், கலப்பு 4*100 மீற்றர் மெட்லி அஞ்சலோட்டம், 100 மீற்றர் பட்டர்பிளை, 4*200 மீற்றர் பிறீஸ்டைல் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை மக்கியோன் வென்றிருந்தார்.
இதேவேளை, ஆண்களுக்கான 50 மீற்றர் பிறீஸ்டைலில் ஐக்கிய அமெரிக்காவின் கேலெப் ட்ரஸல் வென்றிருந்தார்.
இந்நிலையில், ஆண்களுக்கான 4*100 மீற்ரர் மெட்லி நீச்சல் அஞ்சலோட்டத்தில், மூன்று நிமிடங்கள் 26 செக்கன்கள் 78 மில்லி செக்கன்கள் என்ற உலக சாதனைப் பெறுதியுடன் ஐ. அமெரிக்கா தங்கம் வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .