Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 30 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒஸ்திரிய குரான் பிறீயில் மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் நொரிஸ் வென்ற நிலையில், பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த அவரின் சக மக்லரென் ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி 216 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். 201 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நொரிஸ் காணப்படுவதோடு, 155 புள்ளிகளோடு நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
58 minute ago