Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான பிரண்டன் மக்கலம், தற்போது இடம்பெற்றுவரும் பூகோள இருபதுக்கு – 20 கனடாத் தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார்.
அந்தவகையில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற 38 வயதாகும் பிரண்டன் மக்கலம், இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள யூரோ இருபதுக்கு – 20 ஸ்லாம் தொடரின் ஆரம்பப் பருவகாலத்தில் கிளாஸ்கோ ஜையன்ட்ஸ் அணியின் பிரதான வீரரொருவராக பங்கேற்கமாட்டார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தியன் பிறீமியர் லீக்கில் குஜராத் லயன்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், பிக் பாஷில் பிறிஸ்பேர்ண் ஹீட், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாகூர் குவாலன்டர்ஸ், கரீபியன் பிறீமியர் லீக்கில் ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியிருந்தார்.
கடந்தாண்டு டிசெம்பரில் இந்தியன் பிறீமியர் லீக் ஏலத்தில் எந்தவொரு அணியாலும் ஏலமெடுக்கப்பட்டிருக்காத பிரெண்டன் மக்கலம், இவ்வாண்டு பெப்ரவரியில் பிக் பாஷ் லீக்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவேளையில் உலகளாவிய ரீதியில் இருபதுக்கு – 20 கிரிக்கெட்டை விளையாடும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இருபதுக்கு – 20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் பிரெண்டன் மக்கலம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 12,808 ஓட்டங்களை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ள நிலையில், 9,922 ஓட்டங்களை பிரெண்டன் மக்கலம் பெற்றுள்ளார்.
இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 36 வயதான டேல் ஸ்டெய்ன், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
8 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
8 hours ago