2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கட்டாரின் அல் டுஹைலில் இணைந்தார் மண்டூசிச்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸிலிருந்து, குரோஷியாவின் முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரரான மரியோ மண்டூஸிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக கட்டார் கழகமான அல் டுஹைல் நேற்று  அறிவித்துள்ளது.

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு ஜுவென்டஸில் இணைந்த முன்களவீரரான 33 வயதான மரியோ மண்டூசிச், ஜுவென்டஸுக்காக 162 போட்டிகளில் விளையாடி 44 கோல்களைப் பெற்றிருந்தார்.

எவ்வாறெனினும், நடப்பு சீரி ஏ பருவகாலத்தில் ஒரு போட்டியிலும் மரியோ மண்டூசிச் விளையாடியிருக்காத நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டால் ஒப்பந்தம் செய்யப்படுவார் என முன்னர் கூறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .