Editorial / 2026 ஜனவரி 28 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டோனல்ட் பிராட்மன் (Donald Bradman) அணிந்திருந்த தொப்பி 319,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
16.5 விழுக்காடு வரியைச் சேர்த்து அதன் மொத்த விலை சுமார் 370,000 டொலர்.
பிராட்மன் 2001ஆம் ஆண்டு காலமானார்.அப்போது அவருக்கு வயது 92.
1947, 1948 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டத்தில் பிராட்மான் அந்தத் தொப்பியைப் பெற்றார்.
பிராட்மான் அந்தத் தொப்பியை இந்தியக் கிரிக்கெட் விளையாட்டாளர் ஷிரிரங்கா வாசுதேவ் 'ரங்கா' சொஹோனியிடம் (Sriranga Wasudev 'Ranga' Sohoni) கொடுத்தார்.
அந்தத் தொப்பியில் 'D.G. Bradman', 'S.W. Sohoni' என இருவரின் பெயர்களும் உள்ளன. தொப்பி ஏலத்தில் விற்கப்படும்வரை சொஹோனியின் குடும்பத்தார் அதைப் பார்த்துக்கொண்டனர். சொஹோனி 1993ஆம் ஆண்டு 75 வயதில் காலமானார்.
தொப்பியை யார் வாங்கினார் என்பது தெரியவில்லை. அது அஸ்திரேலியாவின் ஓர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago