2025 ஜூலை 02, புதன்கிழமை

கவானியைக் கைச்சாத்திட்ட மன்செஸ்டர் யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 06 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னாள் முன்களவீரரான எடின்சன் கவானியை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கைச்சாத்திடுள்ளது.

உருகுவே சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான எடின்சன் கவானி, இவ்வாண்டு ஜூன் மாதம் முடிவில் பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து விலகியிருந்தார்.

ஓராண்டு ஒப்பந்தமொன்றில் 33 வயதான எடின்சன் கவானி கைச்சாத்திட்டுள்ளார்.

பரிஸ் ஸா ஜெர்மைனுக்காக 301 போட்டிகளில் 200 கோல்களைப் பெற்றது உள்ளடங்கலாக 556 கழகப் போட்டிகளில் 341 கோல்களை எடின்சன் கவானி பெற்றுள்ளார். தவிர, 116 உருகுவே போட்டிகளில் 50 கோல்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்தத்தை ஓராண்டால் நீடிக்கும் தெரிவை எடின்சன் கவானி கொண்டிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .