Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனிய கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற 1899 ஹொஃபென்ஹெய்முடனான மூன்றாவது சுற்றுப் போட்டியை வென்றே காலிறுதிப் போட்டிக்கு பயேர்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது.
இப்போட்டியின் எட்டாவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோலொன்று மூலமாக 1899 ஹொஃபென்ஹெய்ம் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த நான்காவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் மூலமாக கோலெண்ணிக்கையை பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.
இந்நிலையில், அடுத்த எடாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரர் தோமஸ் மல்லர், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
இதேவேளை, அடுத்த 16ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பயேர்ண் மியூனிச்சின் இன்னொரு முன்களவீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கி தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கிய நிலையில் முதற்பாதி 3-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், போட்டியின் 80ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற றொபேர்ட் லெவன்டோஸ்கி, பயேர்ண் மியூனிச்சின் முன்னிலையை 4-1 என்ற கோல் கணக்கில் அதிகரித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற மாற்றுவீரராகக் களமிறங்கிய 1899 ஹொஃபென்ஹெய்மின் முன்களவீரர் மொனெஸ் டாபர், அதற்கடுத்த 10ஆவது நிமிடத்திலும் கோலொன்றைப் பெற்றபோதும் இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்ற பயேர்ண் மியூனிச் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago