Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூன் 18 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கியாஸ் ஷாபி
கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான வெற்றி கிண்ணத்தை ரேஞ்சர்ஸ் உதைப்பந்தாட்ட அணி கைப்பற்றி கிண்ணியா பிரதேச சம்பியன் ஆனது.
கிண்ணியா பிரதேசத்தில் இருந்து 36 உதைப்பந்தாட்ட அணிகள் பங்கு பற்றிய இந்த தொடரின் இறுதி ஆட்டம் குறிஞ்சாக்கேணி மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்றது.
இதில், ரேஞ்சர்ஸ் உதைப்பந்தாட்ட அணியும் முகம்மதியா உதைப்பந்தாட்ட அணியும் மோதிக்கொண்டன.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ரேஞ்சர்ஸ் அணி 2 : 1 என்ற கோல் அடிப்படையில் முகம்மதியா அணியை வெற்றி கொண்டு, இந்த வருடத்துக்கான கிண்ணியா பிரதேச சம்பியன் கிண்ணத் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
தொடரின் சிறப்பாட்டக்காரராக ரேஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த முகம்மது கிப்னியும், சிறந்த கோல் காப்பாளராக ரேஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த முகம்மது பெனோஸும் தெரிவு செய்யப்பட்டதோடு, இந்த வருடத்தின் சிறந்த நன்னடத்தை அணியாக முகம்மதியா விளையாட்டு கழக அணியும் தெரிவு செய்யப்பட்டது.
சம்பியன் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டதோடு, இரண்டாவது அணிக்கு 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடரின் சிறப்பாட்டக்காரர், சிறந்த கோல் காப்பாளர் மற்றும் சிறந்த நன்னடத்தைகான அணி ஆகியவற்றுக்கு தலா 5,000 ரூபாய் பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.
எம். எச். எம். பவுண்டேஷன் அனுசரணையில் இந்த போட்டித் தொடர் நடைபெற்றது. இதன் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான முஸ்லிமின் ஹாஜியார் மஸாகிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசல்களையும் வழங்கி வைத்தார்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago