2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் ஹத்துருசிங்க

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க இடம்பெற்றுள்ளார்.

ஹத்துருசிங்க தவிர, ஏழு பேர் கொண்ட குறித்த குழுவில், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வா, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாலர் கிரேமி லப்ரோய், இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் விவகாரங்களுக்கான பிரதம அதிகாரி அசங்க குருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜெரோம் ஜெயரத்ன, எஸ்.எஸ்.சி கழகத்தின் மைக்கல் டி சொய்ஸா, கென் டி அல்விஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X