2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணி தேர்வு

Simrith   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 இல் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

குறித்த அணி இன்று மாலை (26 செப்டம்பர் 2023) இந்தியா புறப்படவுள்ளது.

அணி

1. தசுன் ஷனக – தலைவர்

2. குசல் மெண்டிஸ் - துணை தலைவர்

3. குசல் பெரேரா

4. பாத்தும் நிஸ்ஸங்க

5. திமுத் கருணாரத்ன

6. சதீர சமரவிக்ரம

7. சரித் அசலங்கா

8. தனஞ்சய டி சில்வா

9. துஷான் ஹேமந்த

10. மகேஷ் தீக்ஷனா

11. துனித் வெல்லலகே

12. கசுன் ராஜித

13. மதீஷ பத்திரன

14. லஹிரு குமார

15. தில்ஷான் மதுஷங்க

இருப்பு

1. சாமிக்க கருணாரத்ன

வனிந்து ஹசரங்கவின் உடல் உபாதை காரணமாக அவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் அவர் விளையாடத் தகுதியானவர் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டால், போட்டியின் போது அணி உறுப்பினருக்கு காயம் ஏற்பட்டால் அவர் (வனிந்து) மாற்றாகக் உள்வாங்கப்படுவார் என இலங்கை குறித்த ஊடக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .