2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கேனின் இறுதி நேர அபார கோலால் ஜுவென்டஸை வென்றது டொட்டென்ஹாம்

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிநேகபூவர்வ கால்பந்தாட்டப் போட்டிகளைக் கொண்ட ஏழாவது சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், சிங்கப்பூரின் கல்லங்கில் நேற்று  இடம்பெற்ற போட்டியின் இறுதி நேரத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரர் ஹரி கேன் பெற்ற அபாரமான கோல் காரணமாக இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸை டொட்டென்ஹாம் வென்றது.

இப்போட்டியின் 30ஆவது நிமிடத்தில் தமது முன்களவீரர் எரிக் லமேலா பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் 56ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஜுவென்டஸின் முன்களவீரரான கொன்ஸலோ ஹியூகைன் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதுடன், அடுத்த நான்காவது நிமிடத்தில் ஜுவென்டஸின் நட்சத்திர முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலின் மூலம் ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது.

எனினும், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தமது முன்களவீரர் லூகாஸ் மோரா பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், போட்டியின் இறுதி நிமிடத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய தமது முன்கள வீரர் ஹரி கேன், மைதானத்தின் அரைப்பகுதியிலிருந்து பெற்ற அபாரமான கோல் காரணமாக இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

குறித்த போட்டியில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸிடமிருந்து 75 மில்லியன் யூரோக்களுக்கு ஐந்தாண்டு ஒப்பந்மொன்றில் ஜுவென்டஸால் கைச்சாத்திடப்பட்ட 19 வயதான பின்களவீரரான மத்தியாஸ் டி லிஜிட் தனது ஜுவென்டஸ் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .