2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

கோப்பா டெல் ரே தொடர்: வெளியேற்றப்பட்ட பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 05 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் தோற்ற பார்சிலோனா, தமது மைதானத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றபோதும் 3-4 என்ற மொத்த கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

பார்சிலோனா சார்பாக மார்க் பெர்னல் இரண்டு கோல்களையும் றபீனியா ஒரு கோலையும் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .