2025 மே 21, புதன்கிழமை

’கோலி இருக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் வாழும்’

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களின் மதிப்பையும், ஆதரவையும் கோலி பெற்றுவிட்டார். அவருக்காக விளையாட ஏனைய வீரர்கள் விரும்புகிறார்கள். அவரின் தலைமையை விரும்புகிறார்கள்“ என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

“ கோலியை அனைவரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள், அனைத்து வீரர்களின் ஆதரவையும் கோலி பெற்றுவிட்டார். கோலிக்கு ஆதரவாக அனைத்து வீர்ரகளும் இருக்கிறார்கள், அவருக்காக விளையாடுகிறார்கள். 

அணி தனக்காக விளையாடுவது என்பது தலைவனுக்கு முக்கியமானது. விராட் கோலியின் நடத்தைதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். 
நன்றி விராட் கோலி. அணியை நீங்கள் வழிநடத்தும் விதம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டில் நம்பிக்கை, நம்பகத்தன்மை முக்கியமானது. அந்த நம்பிக்கையை அணிக்கு கோலி அளித்துள்ளார், விராட் கோலி இருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் நீண்டகாலம் வாழும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .