Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐவரி கோஸ்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான சேர்ஜே ஓரியர், இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரியொருவரை முழங்கையால் இடித்தமைக்காகவே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பரிஸ் சென். ஜேர்மைன் கழகத்துக்காக விளையாடும் ஓரியர், இவ்வாண்டு மே மாதம், பரிஸிலுள்ள இரவு விடுதியொன்றிலேயே, இவ்வாறு முழங்கையால் தாக்கியிருந்தார்.
இரவு விடுதியிலிருந்து அவர் வெளியேறிச் செல்லும் போது, மூச்சுச் சோதனை மேற்கொள்ளப்படுவதற்காக அவர் நிறுத்தப்பட்டார். அதிலேயே அவர், பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதன் காரணமாகக் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, அதிலிருந்து மீள்வதற்கு, ஒரு நாள் விடுப்புப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று, அதன் முடிவிலேயே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு 600 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, வழக்குச் செலவுகளுக்காக, 1,500 யூரோக்களைச் செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக, அவர் மேன்முறையீடு செய்துள்ளதன் காரணமாக, அத்தீர்ப்பு வெளிவரும் வரை, அவர் சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .