2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

சந்தேகத்தில் றிஸ்வானின் தலைமைத்துவம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக மொஹமட் றிஸ்வானின் நிலை சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடருக்கான அணித்தலைவராக இன்னும் இறுதி செய்யவில்லையென அறிக்கையொன்றை பாகிஸ்தான் விடுத்தமையடுத்தே இந்நிலை தோன்றியுள்ளது.

ஒருநாள் சர்வதேசப் போட்டி தலைமைத்துவம் தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுப்பதற்காக தேர்வாளர் குழுவுடன் சந்திப்பொன்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பாகிஸ்தானின் பயிற்சியாளர் மைக் ஹெஸன் அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு அணித்தலைவராக நியமிக்கப்பட்ட றிஸ்வான், அவுஸ்திரேலியா, சிம்பாப்வே, தென்னாபிரிக்காவில் தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும் இவ்வாண்டு நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் முத்தரப்பு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததுடன், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்தும் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் வெளியேறியதுடன், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரிலும் தோல்வியடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .