2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சமநிலையில் இன்டர் – மன்டரேரே போட்டி

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 18 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புதன்கிழமை (18) நடைபெற்ற மெக்ஸிக்கோவின் மன்டரேயுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் சமப்படுத்தியது.

இன்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்டினெஸ் பெற்றதோடு, மன்டரே சார்பாகப் பெறப்பட்ட கோலை சேர்ஜியோ றாமோஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான புளுமினிஸேயுடனான போட்டியை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் 0-0 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X