Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், றியல் சொஸைடட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா சமநிலையில் முடித்துக் கொண்டது.
இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில், றியல் சொஸைடட்டின் பின்களவீரர் டியகோ லொரன்டேயின் சீருடையை பார்சிலோனாவின் மத்தியகளவீரர் சேர்ஜியோ புஷ்கட்ஸ் இழுத்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டியை றியல் சொஸைடட்டின் முன்களவீரர் மிகேல் ஒயர்ஸ்பால் கோலாக்க றியல் சொஸைடட் முன்னிலை பெற்றது.
எனினும், போட்டியின் 38ஆவது நிமிடத்தில், சக முன்களவீரர் லூயிஸ் சுவாரஸிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய பார்சிலோனாவின் முன்களவீரர் அன்டோனி கிறீஸ்மன், கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, போட்டியின் 49ஆவது நிமிடத்தில், அணித்தலைவரும் சக நட்சத்திர முன்களவீரருமான லியனல் மெஸ்ஸியிடமிருந்து வந்த பந்தை லூயிஸ் சுவாரஸ் கோலாக்க பார்சிலோனா முன்னிலை பெற்றது.
எவ்வாறெனினும், போட்டியின் 62ஆவது நிமிடத்தில், றியல் சொஸைடட்டின் பின்களவீரர் நாச்சோ மொன்றியலின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் சரியாகத் தடுக்காத நிலையில், அதை றியல் சொஸைடைட்டின் முன்களவீரர் அலெக்ஸான்டர் இஸக் கோலாக்கியதோடு போட்டி இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஒஸஸுனானவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அல்வரோ மொராட்டா, சாவுல் நிகூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago