Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை சமநிலையில் மன்செஸ்டர் யுனைட்டெட் முடித்துக் கொண்டது.
இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே எவெர்ற்றனின் பகுதிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் ஃபிரட் முன்னேறிச் சென்றபோதும், அவரின் சக முன்களவீரர் ஜெஸி லிங்கார்ட் செலுத்திய உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. தொடர்ந்து மன்செஸ்டர் யுனைட்டெட்டின் இன்னொரு முன்களவீரர் டேனியல் ஜேம்ஸால் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட பந்தும் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.
இந்நிலையில், போட்டியின் 36ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய எவெர்ற்றனின் பின்களவீரரான லெய்ட்டன் பெய்ன்ஸின் மூலையுதையை தடுக்க மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா தடுக்கத் தவற, அது அவ்வணியின் பின்களவீரர் விக்டர் லின்டிலுவில் பட்டு கோலாகியிருந்தது.
டேவிட் டி கியாவின் முகத்துக்கு முன்னால் கையைக் கொண்டு வந்து எவெர்ற்றனின் முன்களவீரர் டொமினிக் கல்வேர்ட்-லூவின் விதிமுறைகளை மீறி செயற்பட்டார் என மன்செஸ்டர் யுனைட்டெட் முறையிட்டபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால் கோல் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போட்டி முடிவடைய 25 நிமிடங்கள் இருக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் மேஸன் கிறீன்வூட்டின் உடனேயே கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்றைக் கொண்டிருந்தபோதும் அதை எவெர்ற்றனின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் தடுத்திருந்தார்.
அந்தவகையில், டேனியல் ஜேம்ஸிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 77ஆவது நிமிடத்தில் மேஸன் கிறீன்வூட் கோலாக்க கோலெண்ணிக்கையை மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தி இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.
இதேவேளை, ஆர்சனலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே இரண்டு கோல்களையும், ரஹீம் ஸ்டேர்லிங் ஒரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, லூகாஸ் மோரா, ஜான் வெர்டொங்கன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அடமா டரோரே பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago