2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சமநிலையில் றியல் மட்ரிட் – செல்டா விகோ போட்டி

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் றியல் மட்ரிட் முடித்துக் கொண்டது.

றியல் மட்ரிட் சார்பாக, டொனி க்றூஸ், சேர்ஜியோ றாமோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்டா விகோ சார்பாக, பியோதர் ஸ்மொலொவ், சன்டி மினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தி நேற்றிரவு நடைபெற்ற அஸ்பன்யோலுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் செவில்லா முடித்திருந்தது.

செவில்லா சார்பாக, லூகாஸ் ஒகம்பொஸ், சுஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அஸ்பன்யோல் சார்பாக, அட்ரி எம்பர்பா, வு லெய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகிறது. 52 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனாவும், 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் கெட்டாபேயும், 40 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும் காணப்படுகின்றன. செவில்லாவும் 40 புள்ளிகளுடனேயே காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் ஐந்தாமிடத்தில் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .