Shanmugan Murugavel / 2025 நவம்பர் 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தோற்றது.
லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் ஸபொஸ்லாய் பெற்றிருந்தார். பி.எஸ்.வி சார்பாக குகைப் டிறியோபெச் இரண்டு கோல்களையும், இவான் பெரிசிச், குஸ் டில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக ஜூரியன் டிம்பர், நொனி மடுகே, கப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை லெனார்ட் கார்ல் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
7 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago