Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி முகாமில் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது. அவர்களால் சிறந்த வீர வீராங்கனைகளை தெரிவு செய்யப்படுவார்கள்.
13 வயதில் இருந்து 25 வயது வரையிலான வீர வீராங்கனைகள் இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும்.
பங்கேற்க விரும்புவோர் 0778013310எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும். அல்லது https://shorturl.at/CDGOQ இந்த இணைப்பின் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
அதேவேளை, நாம் துடுப்பாட்ட அக்கடமி ஒன்றினை, யாழ்ப்பாணத்தில் நிறுவி வருகின்றோம். அது தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதில் துடுப்பாட்டம் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்கி திறமையான வீரர்களை உருவாக்க உள்ளோம். அதற்கான வீரர்களை தேர்ந்து எடுப்பதற்கான முதல் தேர்வே இந்த பயிற்சி முகமாகும்.
இதில் பாடசாலை மாணவர்கள் , கழகங்கள் , மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்கள் என பங்கேற்க முடியும். இதில் 100 தொடக்கம் 150 பேர் வரையில் தேர்வு செய்யவுள்ளோம் என்றார்.
தேர்வு செய்யப்படப்படும் வீர வீராங்கனைகள் எம்மால் நிர்மாணிக்கப்படும் துடுப்பாட்ட அக்கடமியில் மேலும் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதன் ஊடாக அவர்கள் தமது திறமையை வளர்த்து கொள்வதன் ஊடாக வடக்கில் சிறந்த துடுப்பாட்ட வீர வீராங்கனைகள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
எம்மால் உருவாக்கப்படும் வீர வீராங்கனைகளை வெளிநாட்டு கழகங்கள் , சுற்றுப்போட்டிகள் என்பவற்றில் பங்கேற்க முடிந்தவரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்போம். என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago