Shanmugan Murugavel / 2025 ஜூலை 14 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சம்பியனானது.
ஐக்கிய அமெரிக்காவில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான இறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றே செல்சி சம்பியனானது.
செல்சி சார்பாக கோல் பல்மர் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஜோவா பெட்ரோ ஒரு கோலைப் பெற்றார்.
இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை பல்மர் பெற்றதோடு, சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை செல்சியின் றொபேர்ட் சஞ்சேஸும், சிறந்த இளம் வீரருக்கான விருதை டிசையர் டுவேயும் பெற்றனர். சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் தெரிவாகியது.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026