Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகக் கழகமான அல் அய்னை வென்றே ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனாகியது.
இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில், தமது நட்சத்திர மத்தியகள வீரரான லூகா மோட்ரிட்ச் பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்தில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டியின் 60ஆவது நிமிடத்தில் 25 அடி தூரத்திலிருந்து மார்கோஸ் லொரன்டே பெற்ற அபாரமான கோலின் மூலம் தமது முன்னிலையை றியல் மட்ரிட் இரட்டிப்பாக்கியது.
பின்னர், போட்டியின் 78ஆவது நிமிடத்தில் லூகா மோட்ரிட்சின் மூலையுதையை றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் தலையால் முட்டிக் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி முன்னிலை பெற்றது. இந்நிலையில், போட்டி முடிவடைய நான்கு நிமிடங்கள் இருக்கையில் கோலொன்றைப் பெற்ற அல் அய்ன் அணியின் டிசுகாஸா ஷியோதனி றியல் மட்ரிட்டின் முன்னிலையை இரண்டாகக் குறைத்தார். எனினும் மாற்று வீரராகக் களமிறங்கிய றியல் மட்ரிட்டின் வின்சியஸ் ஜூனியர் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்து அல் –அய்ன் அணியின் யஹியா நடேரில் பட்டு ஓவ்ண் கோலாக இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக கழக உலகக் கிண்ணத் தொடரில் றியல் மட்ரிட் சம்பியனாகியது.
இப்போட்டியின் ஆரம்பத்தில், றியல் மட்ரிட்டின் லூகாஸ் வஸ்கூஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்யிருந்ததுடன், கரெத் அபாரமாக முயன்ற தலைக்கு மேலால் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்கு சற்று மேலால் சென்றிருந்தது.
இதேவேளை, 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடரில் இம்முறையுடன் மொத்தமாக நான்கு தடவைகள் வென்றுள்ள றியல் மட்ரிட், இத்தொடரை அதிகள் தடவைகள் வென்ற அணியாக தமது பெயரைப் பதிவுசெய்து கொண்டது. அடுத்த இடத்தில், இத்தொடரை மூன்று தடவைகள் வென்ற பார்சிலோனா காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago