Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 11 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸை வென்றே மும்பை இந்தியன்ஸ் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி, கட்டுக்கோப்பாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் (3), ஜஸ்பிரிட் பும்ரா, நேதன் கூல்டர்நைல் (2), ஜெயந்த் யாதவ்விடம் (1), விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில், றிஷப் பண்டின் 56 (38), அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 65 (50) ஓட்டங்களால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியஸ், அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவின் 68 (51), குயின்டன் டி கொக்கின் 20 (12), இஷன் கிஷனின் ஆட்டமிழக்காத 33 (19) ஓட்டங்களுடன் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ட்ரெண்ட் போல்ட் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .