Shanmugan Murugavel / 2021 நவம்பர் 06 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் டொட்டமுண்ட் தோற்றது.
டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ றொய்ஸ் பெற்றிருந்தார். அஜக்ஸ் சார்பாக, டுஸன் டடிச், செபஸ்டியன் ஹோலர், டேவி கிளாசென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மைதானத்தில் நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, டியகோ ஜோட்டா, சாடியோ மனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சமப்படுத்தியிருந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜோர்ஜினியோ விஜ்னால்டும் பெற்றதோடு, லெய்ப்ஸிக் சார்பாக, கிறிஸ்டோபர் என்குங்கு, டொமினிக் ஸொபொஸ்லாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் கழகமான போர்டோ சமப்படுத்தியிருந்தது. போர்டோ சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் டயஸ் பெற்றதோடு, மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025