2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியன்ஸ் லீக்: அத்லெட்டிகோவை வென்ற லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா இரண்டு கோல்களையும், நபி கெய்ட்டா ஒரு கோலையும் பெற்றதோடு, அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அந்தோனி கிறீஸ்மன் பெற்றிருந்தார்.

இதேவேளை, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கை 3-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றிருந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், கிலியான் மப்பே ஒரு கோலையும் பெற்றனர். ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, அன்ட்ரே சில்வா, நொர்டி முகியெலே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், போர்த்துக்கல் கழகமான போர்டோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், லூயிஸ் டயஸ் பெற்ற கோலுடன் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் தோற்றிருந்தது.

இதேவேளை, நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 0-4 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் தோற்றிருந்தது. அஜக்ஸ் சார்பாக, டலி பிளைன்ட், அந்தோனி, செபஸ்டியன் ஹோலர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .