2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சம்பியன்ஸ் லீக்: லெய்ப்ஸிக்கிடம் தோற்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.

பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஏஞ்சல் டி மரியா பெற்றிருந்ததோடு, ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக கிறிஸ்தோபர் என்குங்கு, எமில் பொர்ஸ்பேர்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, துருக்கியக் கழகமான இஸ்தான்புல் பஸக்செஹிரின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான இன்னொரு குழு எச் போட்டியொன்றில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி மார்ஷியல் பெற்றிருந்தார். இஸ்தான்புல் பஸக்செஹிர் சார்பாக டெம்பா பா, எடின் விஸ்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், ரஷ்யக் கழகமான ஸெனிட் பீற்றர்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோ சமப்படுத்தியிருந்தது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட பிலிப்பி கைகடோ பெற்றதோடு, ஸெனிட் பீற்றர்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் யெரொக்ஹின் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .