Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வந்த 2015/16 பருவகாலத்துக்கான பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் டாக்கா, மிர்பூர் ஷேர் பங்களா தேசிய அரங்கில் பரிசல் புல்ஸ் அணியுடனான இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இறுதிப் பந்தில் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று கொமிலா விக்டோரியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பரிசல் புல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அணித்தலைவர் மஹ்முதுல்லா ஒரு ஆறு ஓட்டம், ஆறு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 36 பந்துகளில் 48 ஓட்டங்களையும் ஷாகாரியார் நபீஸ் மூன்று, ஆறு ஓட்டங்கள், இரண்டு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி சார்பாக டரன் ஸ்டீவன்ஸ், அஷார் சைடி, மஷ்ரபி மோட்டார்சா, நுவான் குலசேகர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொமிலா விக்டோரியன்ஸ் அணி, தனது இனிங்ஸின் இறுதிப்பந்தில் வெற்றியிலக்கை அடைந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 28 பந்துகளில் 5, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்ற அலோக் கபாலி வெற்றி நாயகனாக மிளிர்ந்தார். தவிர, 3, ஆறு ஓட்டங்கள், 6, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 37 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கான அடித்தளத்தை இம்ரல் கைஸ் இட்டிருந்தார்.
பந்துவீச்சில் பரிசல் புல்ஸ் அணி சார்பாக மஹ்முதுல்லா, கெவன் கூப்பர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மொஹமட் சமி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக அலோக் கபாலியும் தொடரின் நாயகனாக அஷார் சைடியும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .