Gopikrishna Kanagalingam / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான தலைவர் அஞ்சலோ மத்தியூஸின் தலைமையில், 15 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமின் உப தலைவராக, உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்:
அஞ்சலோ மத்தியூஸ், உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், சாமர கப்புகெதர, அசேல குணரட்ன, டினேஷ் சந்திமால், லசித் மலிங்க, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், நுவான் குலசேகர, திஸர பெரேரா, லக்ஷன் சந்தகான், சீக்குகே பிரசன்ன.
இவர்களுக்கு மேலதிகமாக, இத்தொடரில் டில்ருவான் பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோர், மேலதிக வீரர்களாகச் செயற்படுவர்.
இவர்கள் தவிர, விகும் சஞ்சய, லஹிரு குமார, சச்சித் பத்திரண, மிலிந்த சிரிவர்தன, அகில தனஞ்சய ஆகிய 5 வீரர்களும், மேலதிக வீரர்களாக, கொழும்பில் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருப்பர். தேவையேற்படின், இங்கிலாந்து அல்லது வேல்ஸுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago