2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் சாதனை

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் நகரின் பாத்திமா ஜின்னா பூங்காவில்  (23) ஞாயிற்றுக்கிழமை  
நடைபெற்ற தெற்காசிய நாடுகள் பங்குபற்றிய (SAAF Games 2025) சிரேஷ்ட்ட பிரிவுக்கான நகர்வல (Cross Country) ஓட்டப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவன் வக்க்ஷன் விற்கின்ராஜ் 10 கிலோமீற்றர் தூரத்தை 31 நிமிடங்கள் 56.38 செக்கன் களில் ஓடி முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 
இவர் தலவாக்கலை மிடில்டன்  தோட்டத்தைச் சேர்ந்த வக்க்ஷன் கடந்த ஆறு வருட காலமாக இலங்கை ராணுவத்திற்காக தேசிய  மெய்வளுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு வீரராகவும் பணியாற்றி வருகின்றார். பக்சன் கலந்து கொண்ட முதலாவது சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கணிஷ்ட்ட பிரிவு ஆண்களுக்கான 8 கி.மீற்றர்  நகர்வல ஓட்டப் போட்டியில்  மாத்தளை இந்து தேசிய  கல்லூரியின் மாணவனான சிவாஹரன் துதிஹர்ஷிதன் கலந்து கொண்டு 27 நிமிடங்கள் 3.90 செக்கன்களில  போட்டியை நிறைவு செய்து 2ஆம்இடத்தைப்பெற்றுக்கொண்டுள்ளார. இவரும் தான் கலந்து கொண்ட முதலாவது சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் பதக்கத்தை பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X