2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

சாம்சனைப் பிரதியிடும் கில், ஜிதேஷ்?

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் இந்திய அணியில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக சஞ்சு சாம்சனை ஷுப்மன் கில் பிரதியிடுவதோடு, விக்கெட் காப்பாளராக சாம்சனை ஜிதேஷ் ஷர்மா பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் மூன்று வலைப்பயிற்சிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இந்தியா மேற்கொண்ட நிலையில், ஒவ்வொன்றிலும் இறுதியாகவே சாம்சன் துடுப்பாட்டப் பயிற்சியை மேற்கொண்டதுடன், ஐந்து நிமிடங்கள் அளவிலேயே விக்கெட் காப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

மறுபக்கமான சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின்போது டுபாய் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த நிலையில், மொஹமட் ஷமியோடு, சகலதுறைவீரராக ஹர்திக் பாண்டியாவுடன் இரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் விளையாடியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது டுபாய் ஆடுகளமானது பச்சையாகக் காணப்படுவதுடன், இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்றுள்ள நிலையில் எட்டாமிடத்தில் அர்ஷ்டீப் சிங் அல்லது ஹர்ஷித் ரானாவை விளையாட வைப்பதா அல்லது ஷிவம் டுபேயைக் கொண்டு வந்து துடுப்பாட்டத்தைப் பலப்படுத்துவதாதென்பது சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றது.

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது குழு ஏ போட்டியில் ஐ.அ. அமீரகத்தை இந்தியா எதிர்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .