2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

சார்ஜென்ட் பிரியந்தவுக்கு பதவி உயர்வு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவால் ஆணைப் பத்திரம் வழங்கும் அதிகாரியாக இன்று (30) பதவி உயர்த்தப்பட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அவர் நாட்டுக்கு வழங்கிய கௌரவத்தை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X