Editorial / 2020 நவம்பர் 08 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் குவாதிர், வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் றாஃப், துடுப்பாட்டவீரர் ஹைதர் அலி உள்ளிட்ட இளம்வீரர்கள் பிரகாசிக்க சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான் ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றதன் மூலம் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே, ஹரிஸ் றாஃப், உஸ்மான் குவாதிரிடம் தலா மூன்று விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு. 135 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அணித்தலைவர் பாபர் அஸாமின் 51 (28), ஹைதர் அலியின் ஆட்டமிழக்காத 66 (43) ஓட்டங்களுடன் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026