Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனித் தலைநகர் பேர்லினில் நேற்றிரவு நடைபெற்ற கடந்தாண்டுக்கான லொரியஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில், ஆண்டின் சிறந்த விளையாட்டுவீரராக நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன், ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான லா லிகாவின் நட்சத்திர முன்களவீரரான லூயிஸ் மெஸ்ஸி ஆகியோர் தெரிவாகினர்.
இவ்விருதுகளானது 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வாக்களிப்பு சமநிலையில் முடிவுற்று முதற்தடவையாக இருவர் ஆண்டின் சிறந்த விளையாட்டுவீரருக்கான விருதை பகர்ந்து கொண்டிருந்தனர்.
தவிர, இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுவீரர் விருதை வென்ற முதலாவது கால்பந்தாட்ட வீரராக ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி தனது பெயரைப் பதித்துக் கொண்டார்.
மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், 11 பந்தய வெற்றிகள் உள்ளடங்கலாக 17 பந்தயங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து தனது ஆறாவது உலக சம்பியன்ஷிப்பை கடந்தாண்டு வென்றிருந்தார்.
மறுப்பக்கமாக, லியனல் மெஸ்ஸி அணித்தலைவராகவும் இருக்கும் பார்சிலோனாவானது கடந்த பருவகாலத்தில் லா லிகா சம்பியனாகியிருந்தது.

இதேவேளை, ஆண்டின் சிறந்த விளையாட்டுவீராங்கனையாக ஐக்கிய அமெரிக்காவின் சீருடற்பயிற்சி வீராங்கனையான சிமோன் பைல்ஸ் தெரிவானார். கடந்தாண்டு நடைபெற்ற உலக சீருடற்பயிற்சி சம்பியன்ஷிப்பில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்று உலக சாதனையாக 25 தங்கப் பதக்கங்களைக் கொண்டுள்ள சிமோன் பைல்ஸ், 2017, கடந்தாண்டும் இவ்விருதை வென்றதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்விருதை வென்றிருந்தார்.
இந்நிலையில், ஆண்டின் சிறந்த அணியாக கடந்தாண்டு றக்பி உலகக் கிண்ணத்தை வென்ற தென்னாபிரிக்க அணி தெரிவாகியது.
இதேவேளை, கடந்த 20 ஆண்டுகளின் சிறந்த விளையாட்டுத் தருணத்துக்கான விருதை, 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின்போது தனது நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தென்டுல்கர் தெரிவானார்.
1 hours ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
27 Jan 2026