2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறந்த வீரராக பெடரர், வீராங்கனையான செரீனா

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தெரிவாகியுள்ளதோடு, சிறந்த வீராங்கனையாக 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தெரிவானார்.

20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கொண்டுள்ள ரொஜர் பெடரர், ஏழாண்டுக்களாக பிரதான பட்டங்களெதுவையும் வெல்லாததைத் தொடர்ந்து கடந்தாண்டு அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரையும் விம்பிள்டனையும் வென்றிருந்தார்.

அந்தவகையில், 36 வயதான ரொஜர் பெடரர் கடந்தாண்டின் சிறந்த மீள்வருகைக்கான விருதையும் வென்றிருந்தார்.

உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கடந்தாண்டு ஜனவரியில் தனது 23ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார்.

இதேவேளை, கடந்தாண்டின் சிறந்த அணிக்கான விருதை, போர்மியுலா வண்ணின் தயாரிப்பாளர்கள் சம்பியனான மெர்சிடீஸ் அணி பெற்றது.

இந்நிலையில், கடந்தாண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருக்கான விருதை, சக்கரங்கள் பொருத்தப்பட்ட கதிரையில் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் சுவிற்ஸர்லாந்தின் மார்செல் ஹக் வென்றார்.

இதேவேளை, திருப்புமுனைக்கான விருதை ஸ்பெய்னின் கோல்ப் விளையாட்டு வீரரான சேர்ஜியோ கர்சியா பெற்றார்.

இந்நிலையில், அசாதரணமான அடைவு விருதை, இத்தாலியின் ஓய்வுபெற்ற கால்பந்தாட்ட வீரர் பிரான்ஸெஸ்கோ டோட்டி பெற்றார்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தில் தமது பெரும்பாலான வீரர்களை இழந்திருந்த பிரேஸிலிய கால்பந்தாட்டக் கழகமான சப்பிகுயின்ஸ், கடினமாக நிலையிலிருந்து மீண்டு வந்தமைக்காக விளையாட்டின் சிறந்த தருணம் விருது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .