2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிற்றியை விட்டு விலகுகிறாரா டீ ப்ரூனே?

Editorial   / 2020 மே 03 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தடையானது தொடரும் பட்சத்தில் மன்செஸ்டர் சிற்றியிலிருந்து தான் விலகலாம் என்றவாறான கருத்துகளை அக்கழகத்தின் மத்தியகளவீரரான கெவின் டீ ப்ரூனே வெளிப்படுத்தியுள்ளார்.

நிதியியல் நடைமுறைகளை மீறியமைக்காக மன்செஸ்டர் சிற்றிக்கு சம்பியன்ஸ் லீக்கில் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தால் இரண்டாண்டு தடையொன்று இவ்வாண்டு பெப்ரவரி மாதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் மன்செஸ்டர் சிற்றி மேன்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக்கில் இரண்டாண்டுகள் விளையாட முடியாத பட்சத்தில் மன்செஸ்டர் சிற்றியிலிருந்து வெளியேற விரும்புவேன் என கெவின் டீ ப்ரூனே தெரிவித்துள்ளபோதும், ஓராண்டு விளையாட முடியாமல் போவது முகாமைத்துவம் செய்யக் கூடியது எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றியில் தான் தொடருவது அதன் முகாமையாளர் பெப் குவார்டியோலா கழகத்தில் அடுத்தாண்டு முடிவடையும் அவரது தற்போதைய ஒப்பந்தத்தத்தை தாண்டி நீடிக்கிறாரா என்பதில் தங்கியிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .