2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிற்றியை வீழ்த்தியது செல்சி

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி இப்பருவகாலத்தில் முதன்முறையாக தோற்றுள்ளது.

செல்சியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் தோற்றதன் மூலமே நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தில் முதற்தடவையாக மன்செஸ்டர் சிற்றி தோற்றுள்ளது.

இப்போட்டியின் முதற்பாதியில் மன்செஸ்டர் சிற்றி சிறப்பாக விளையாடியிருந்தபோதும் முதற்பாதி முடிவில், செல்சியின் நட்சத்திர வீரர் ஈடின் ஹஸார்ட்டிடமிருந்து வந்த பந்தை அவரின் சக வீரர் என்கலோ கன்டே கோலாக்க செல்சி முன்னிலை பெற்றது.

குறித்த முன்னிலையுடன் இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடிய செல்சி, போட்டி முடிவடைய 12 நிமிடங்களிருக்கையில் மூலையுதையொன்று கோல் கம்பத்தில் பட்டு வர அதை தமது பின்கள வீரர் டேவிட் லூயிஸ் தலையால் முட்டிக் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, இலங்கை நேரப்படி நேற்றிரவும் இன்று அதிகாலையும் இடம்பெற்ற பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

போர்ண்மெத்தின் மைதானத்தில்,

லிவர்பூல் 4 – 0 போர்ண்மெத்

முதற்பாதி முடிவில் 1-0

மொஹம்ட் சாலா 25, 48, 77

ஸ்டீவ் குக் 68 (ஓவ்ண் கோல்)

 

லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில்,

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 2 – 0 லெய்செஸ்டர் சிற்றி

முதற்பாதி முடிவில் 1 – 0

சண் ஹெயுங் மின் 45+1

டெலே அல்லி 58

 

ஆர்சனலின் மைதானத்தில்,

ஆர்சனல் 1 – 0 ஹட்டர்ஸ்பீல்ட் டெளண்

முதற்பாதி முடிவில் 0 – 0

லூகாஸ் டொரெய்ரா 83

 

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில்,

மன்செஸ்டர் யுனைட்டெட் 4 – 1 புல்ஹாம்

முதற்பாதி முடிவில் 3 – 0

அஷ்லி யங் 13

ஜுவான் மாத்தா 28

றொமேலு லுக்காக்கு 42

மார்க்கஸ் றஷ்போர்ட் 82

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தின் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

  1. லிவர்பூல் 42 புள்ளிகள்
  2. மன்செஸ்டர் சிற்றி 41 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 36 புள்ளிகள்
  4. செல்சி 34 புள்ளிகள்
  5. ஆர்சனல் 34 புள்ளிகள்
  6. மன்செஸ்டர் யுனைட்டெட் 26 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .