Shanmugan Murugavel / 2026 மார்ச் 18 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக மொராக்கோ பிரகடனப்படுத்தப்பட்டதுடன், செனகலின் பட்டமானது தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான மேன்முறையீட்டையடுத்து ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தால் செவ்வாய்க்கிழமை (17) பறிக்கப்பட்டுள்ளது.
எதிராக வழங்கப்பட்ட பெனால்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து களத்தை விட்டு வெளியேறியதால் செனகல் போட்டியை விட்டுக் கொடுத்ததாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செனகலானது 14 நிமிடங்களின் பின்னர் களத்துக்குத் திரும்பி மேலதிக நேரத்தில் பெறப்பட்ட கோல் காரணமாக வென்றிருந்தது.
இந்நிலையில் இம்முடிவை மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மேன்முறையீட்டுச் சபை மாற்றியுள்ளது.
அந்தவகையில் இம்முடிவை விளையாட்டுக்கான தீர்ப்பாயத்திடம் எடுத்துச் செல்லவுள்ளதாக செனகல் கால்பந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
13 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago