2025 ஜூலை 21, திங்கட்கிழமை

செவில்லாவை வென்றது றியல் மட்ரிட்

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், செவில்லாவை றியல் மட்ரிட் வென்றது.

இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து நாச்சோ மொன்றியல் பெற்ற கோல் காரணமாக ஆரம்பத்திலேயே றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. இதன்பின்னர், உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பலூன் டோர் விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, மார்கோ அஸென்ஸியோவிடம் பெற்ற பந்தை போட்டியின் 23ஆவது நிமிடத்தில் கோலாக்கியதுடன், 31ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியையும் கோலாக்க, 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, போட்டியின் 38ஆவது நிமிடத்தில் டொனி க்ரூஸ் பெற்ற கோலுடனும் அச்ரப் ஹகிமி போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடனும் 5-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X