2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

செல்சி, ஆர்சனல் தோல்வி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட லீக் கிண்ணத்துக்கான போட்டிகளில், செல்சி, ஆர்சனல் கழகங்கள், அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. எவேர்ட்டன், ஹள் சிற்றி, ஷெபீல்ட் வெனிஸ்டே, ஸ்டோக் சிற்றி ஆகிய கழகங்கள், காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

எவேர்ட்டன் கழகத்துக்கும் நோர்விச் சிற்றி கழகத்துக்குமிடையிலான போட்டியில், 51ஆவது நிமிடத்தில் நோர்விச் சிற்றியின் செபெஸ்டியன் பஸொங், 68ஆவது நிமிடத்தில் எவேர்ட்டனின் லியொன் ஒஸ்மான் கோல்களால், 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.

போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்குப் பெனால்டி முறை பயன்படுத்தப்பட்டதோடு, எவேர்ட்டன் கழகம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஹள் சிற்றி அணிக்கும் லெய்செஸ்டர் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், முழு நேரத்தில் கோல்களெவையும் பெறப்படாது போக, மேலதிக நேரத்தில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.

போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்குப் பெனால்டி முறை பயன்படுத்தப்பட்டதோடு, ஹள் சிற்றி கழகம் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஷெபீல்ட் வெனிஸ்டே அணிக்கும் ஆர்சனல் அணிக்குமிடையிலான போட்டியில், ஷெ‡பீல்ட் வெனிஸ்டே அணி 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி வெற்றிபெற்றது.

அவ்வணி சார்பாக றொஸ் வலஸ், லூகாஸ் ஜோவோ, சாம் ஹற்சின்ஸன் ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
ஸ்டோக் சிற்றி அணிக்கும் செல்சி அணிக்குமிடையிலான போட்டியில், முழு நேரத்தில் 1-1 என்ற சமநிலை முடிவு பெறப்பட, வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, இரு அணிகளினதும் முதல் 4 வீரர்களையும் கோல்களாக அவற்றை மாற்ற, ஸ்டோக் சிற்றியின் 5ஆவது வீரரான மார்கோ ஆர்னடோவிடிச், தனக்கான வாய்ப்பை கோலாக்கினார். எனினும் 5ஆவது வீரரான ஈடன் ஹஸார்ட், தனது வாய்ப்பைத் தவறவிட, 4-5 என்ற கணக்கில் செல்சி அணி தோல்வியடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .