Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஜுவென்டஸுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
இன்டர் சார்பாக பியோ எஸ்பொஸிட்டோ, பியோத்தர் ஸிலென்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. ஜுவென்டஸ் சார்பாக அன்ட்ரியா கம்பியாஸோ, மனுவல் லொகடெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை லேஸியோவின் மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா வென்றது. அத்லாண்டா சார்பாக எடெர்சன், நிகொலா ஸலெவ்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 49 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நாப்போலியும் காணப்படுகின்றன. ஜுவென்டஸும், றோமாவும் தலா 46 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி நான்காமிடத்தில் ஜுவென்டஸும், ஐந்தாமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட இன்டரும், ஜுவென்ஸும் ஒரு போட்டியில் அதிகமாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .