2025 ஜூலை 02, புதன்கிழமை

ஜேர்மனிய சுப்பர் கிண்ணம்: சம்பியனாகியது பயேர்ண் மியூனிச்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய சுப்பர் கிண்ணத்துக்கான போட்டியில் பயேர்ண் மியூனிச் சம்பியனாகியது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான பொரூசியா டொட்டமுண்டுடனான போட்டியில் வென்றே எட்டாவது முறையாக ஜேர்மனிய சுப்பர் கிண்ணத்தை பயேர்ண் மியூனிச் கைப்பற்றியது.

இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் கொரென்டின் டொலிஸோ பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பயேர்ண் மியூனிச், அடுத்த 14ஆவது நிமிடத்தில் தமது முன்களவீரர் தோமஸ் மல்லர் பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இந்நிலையில், அடுத்த ஏழாவது நிமிடத்தில் தமது முன்களவீரர் ஜூலியன் பிரான்ட் மூலம் கோலொன்றைப் பெற்ற பொரூசியா டொட்டமுண்ட், பயேர்ண் மியூனிச்சின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைத்ததுடன், போட்டியின் 55ஆவது நிமிடத்தில் தமது இன்னொரு முன்களவீரரான எர்லிங் பிறோட் ஹலான்ட் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

எனினும், தமது இன்னொரு முன்களவீரர் ஜோஷுவா கிம்மிச் மூலம் 82ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பயேர்ண் மியூனிச், இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

ஜேர்மனிய சுப்பர் கிண்ணப் போட்டியில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா சம்பியன்களும், ஜேர்மனியக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனிய கிண்ணத் தொடரின் சம்பியன்களும் மோதுகின்ற நிலையில், இம்முறை இவ்விரண்டிலும் பயேர்ண் மியூனிச்சே சம்பியனாகியிருந்த நிலையில், பயேர்ண் மியூனிச்சுடன், புண்டெலிஸ்காவில் இரண்டாமிடத்தில் வந்த பொரூசியா டொட்டமுண்ட் மோதியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .