2025 மே 21, புதன்கிழமை

டக்வேர்த் லூயிஸில் இலங்கையை வென்றது தென் ஆபிரிக்கா

Editorial   / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையில், நேற்று (04) சனிக்கிழமை நிறைவடைந்த இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி, 67 ஓட்டங்களால்   வெற்றியீட்டியது.

எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில்   நடைபெற்ற இப்போட்டியில், டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரமே தென் ஆபிரிக்க அணி வெ ற்றியீட்டியது.

3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின், இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியதன் பின்னர்,  இரண்டு அணிகளுக்கும் இடையிலான 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதித்து ஆரம்பித்த இப் போட்டி அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய, தென் ஆபிரிக்கா அணி,  284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

அந்த இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 25ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 114 ஒட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் இலங்கை 41 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது.

20 நிமிட தடையின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இலங்கையின் வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 265 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

ஆனால், இலங்கை 36.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .