Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 01 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டேர்பனில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் தரவரிசையில் மூன்றாமிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காவில் வைத்துத் டெஸ்ட் தொடரொன்றில் தோல்வியடையாத தனது வரலாற்றைத் தொடர்ந்து, 3-0 அல்லது அதற்கு 4-0 என்ற வகையில் இத்தொடரைக் கைப்பற்றினால் தற்போது தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்காவை மூன்றாமிடத்துக்குப் புள்ளி இரண்டாமிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மறுபக்கமாக, 0-4 என்ற வகையில் தொடரை இழந்தால், நியூசிலாந்திடம் மூன்றாமிடத்தைப் பறிகொடுத்து நான்காமிடத்துக்கு அவுஸ்திரேலியா செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கெதிரான தொடரின்போது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களை தென்னாபிரிக்கா பயன்படுத்தியிருந்தபோதும், மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் என அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக் குழாமைக் கொண்டிருக்கின்ற அவுஸ்திரேலியாவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் மேலதிக அனுகூலத்தை வழங்கக் கூடுமென்பதால், மெதுவான ஆடுகளங்களைக் கொண்டதாகவே இத்தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், மெதுவான ஆடுகளங்களைக் கொண்டதாக இத்தொடர் அமையும் பட்சத்தில் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையனும் தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ்ஜும் முக்கியமானவர்களாக விளங்குவார்கள்.
அணிகளின் பதினொருவரைப் பொறுத்த வரையில் அவுஸ்திரேலியா தமது அணியை அறிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா, நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர், விக்கெட் காப்பாளருடன் சேர்த்து ஆறு துடுப்பாட்ட வீரர்கள் என்ற கூட்டணியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி: 1. கமரோன் பன்குரோப்ட், 2. டேவிட் வோணர், 3. உஸ்மான் கவாஜா, 4. ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), 5. ஷோன் மார்ஷ், 6. மிற்செல் மார்ஷ், 7. டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), 8. மிற்செல் ஸ்டார்க், 9. பற் கமின்ஸ், 10. நேதன் லையன், 11. ஜொஷ் ஹேசில்வூட்.
எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: 1. டீன் எல்கர், 2. ஏய்டன் மர்க்ரம், 3. ஹஷிம் அம்லா, 4. ஏ.பி டி வில்லியர்ஸ், 5. பப் டு பிளெஸி (அணித்தலைவர்), 6. குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), 7. வேர்ணன் பிலாந்தர், 8. கேஷவ் மஹராஜ், 9. கஜிஸோ றபடா, 10. மோர்னி மோர்கல், 11 லுங்கி என்கிடி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago