2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

டொட்டமுண்டுக்கு திரும்புகிறார் பயேர்ணின் ஹம்மெல்ஸ்

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சுக்காக மூன்றாண்டுகள் விளையாடியதை முடித்துக் கொண்டு, அவ்வணியின் பின்களவீரரான மற்ஸ் ஹம்மெல்ஸ், இன்னொரு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுக்கு திரும்பவுள்ளதாக பயேர்ண் மியூனிச்சும், பொரூசியா டொட்டமுண்டும் அறிவித்துள்ளன.

சர்வதேசப் போட்டிகளுக்காக 30 வயதான மற் ஹம்மெல்ஸ் கருத்திற் கொள்ளப்படமாட்டார் என ஜேர்மனியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோவால் இவ்வாண்டு ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த மற்ஸ் ஹம்மெல்ஸ், மேலதிகக் கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக 38 மில்லியன் யூரோக்களில் பொரூசியா டொட்டமுண்டுக்கு திரும்புகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, பயேர்ண் மியூனிச்சிலிருந்து 2008ஆம் ஆண்டு பொரூசியா டொட்டமுண்டில் இணைந்திருந்த மற்ஸ் ஹம்மெல்ஸ் 2016ஆம் ஆண்டு வரையில் 310 போட்டிகளில் பொரூசியா டொட்டமுண்டுக்காக விளையாடியிருந்தார்.

2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ஜேர்மனியுடன் வென்றிருந்த மற்ஸ் ஹம்மெல்ஸ், 2011ஆம் ஆண்டு பொரூசியா டொட்டமுண்டுடன் புண்டெலிஸ்கா பட்டத்தை வென்றிருந்தார். 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை பொரூசியா டொட்டமுண்டுக்கு தலைமை தாங்கியிருந்த மற்ஸ் ஹம்மெல்ஸ், 2016ஆம் ஆண்டு 35 மில்லியன் யூரோக்கள் என்று கூறப்படும் தொகைக்கு பயேர்ண் மியூனிச்சுக்குத் திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .